நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்.
கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரண்டு குடும்பங்களால் குடியேற்றப்பட்ட கோட்டையூர் கிராமம் தற்போது சுமார் 130 குடும்பங்களாக பெருகி வளர்ந்துள்ளது.
இக்குடும்பங்கள் ஆன்மீகத்தில் வளர்வதையும் ஆலயம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் அறிந்த அன்றைய சூராணம் பங்குத்தந்தை அருள்பணி. பாப்பையா 1941 இல் புனித தோமையார் ஆலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மக்கள் தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பையும், கடினமான உழைப்பையும், இடைவிடா ஜெபத்தையும் செய்தனர்.
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். சிவகங்கை மறை மாவட்டம் கோட்டையூர் கிராமம் பழமையும் பெருமையும் வாய்ந்த ஊர். அண்டி வரும் அனைவருக்கும் அருள் பாலிக்கும் புனித தோமையார் ஆலயம் ஊருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. 2013 ம் ஆண்டு பங்குத்தளமாக உயர்த்தப்பட்டதற்குப் பிறகு பல்வேறு வளர்ச்சிகளை கண்டு வருகிறது. இதனை சமூக வலைதளத்தின் வழி உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் நம் பங்கு இளையோரின் முயற்சியால் உருவாகிய இந்த முயற்சி பெரும் பயன் விளைவிக்கும் என்று நம்புகின்றேன். தொடரட்டும் இம்மாதிரிகள் பணிகள்.
நாமும் இதனை நன்கு பயன்படுத்தி ஆன்மீகத்தில் வளர்வோம். இறைவன் புனித தோமையாரின் பரிந்துரையால் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Several countries have with significant political transitio election.
Climate chang mitigation sustainabilit efforts gaining moment transitioning.
25 Sep 2025 | Kottaiyur